கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்..!

வன பகுதியில் 10-பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் 20-நேர்கோட்டு பாதையில் வனத்துறையினர் வன விலங்குகள் தாவர உண்ணிகள், விலங்கு உண்ணிகள், பறவைகள் போன்ற விலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உட்பட்ட வால்பாறை மானாம்பள்ளிபோன்றவன சரகங்களில் ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழைக்குமுன்பு வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மற்றும் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி என்று ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கீடுகள் செய்யப்பட்டு தேசிய வனவிலங்கு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மானாம்பள்ளிவன சரகங்களில்நடைபெறுகிறது. இதில்இன்று வால்பாறை வன சரகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



வால்பாறை வனச்சரகத்தில் வனப்பகுதியில் 10-பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் 20-நேர்கோட்டு பாதையில் வனத்துறையினர் வன விலங்குகள் தாவர உண்ணிகள், விலங்கு உண்ணிகள், பறவைகள் போன்ற விலங்குகளைகணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையில், வனவர் மணிகண்டன் மற்றும் கீர்த்தி ஆகியோரில் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து வன பகுதிக்குள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். வால்பாறை, கவர்கள், அக்காமலை, போன்ற வனப்பகுதிக்குள் இன்றுபணி நடைபெற்றது.

நாளை வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நிறைவு செய்யும் நிலையில் 8 நாட்கள்கணக்கெடுக்கப்பட்டடேட்டாவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...