எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கோவை: எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாக கூறி அரசு கல்வி உதவி பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார்(லிட்டில் கிங்டம்-(பிரைமரி பள்ளி)) பள்ளியில் பயிலும் அரசு உதவி பெறும் (RTE-இலவச கல்வி திட்டம்) குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
பள்ளி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை மூடி விட்டதாகவும், இது குறித்து நிர்வாகத்தினரிடம் கேட்ட போது பண பற்றாக்குறை காரணமாக முடிவதாகவும்,தங்கள் குழந்தைகளுக்கு வேறு பள்ளிகள் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்த நிலையில், ஒரு மாத காலமாகியும் பள்ளிகள் ஒதுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி நிர்வாகம் RTE திட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் பட்டியலை அரசிற்கு அனுப்பாமல் தங்களிடம் அனுப்பி விட்டதாக பொய் கூறியதாக தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கால் குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் தங்கள் குழந்தைகளுக்கு வேறு பள்ளிகளில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.