இன்சூரன்ஸ் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியால் காப்பீட்டில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, உடனடியாக மத்திய அரசு இன்சூரன்ஸ் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் இன்சூரன்சில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதியதாக இன்சூரன்சில் சேருபவர்களின் எண்ணிக்கை இதன் காரணமாக குறைந்து வருகிறது. 

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த கையெழுத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்தார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...