மதவாத பாஜக-வுடன் அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அக்கட்சிக்கும் ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
கோவையில் இன்று அரசியல் கட்சிகள் இணைந்து துவங்கும் கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.
அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் பேட்டியளித்தபோது கூறியதாவது:- அதிமுக இரு அணிகள் இணைப்பு என்பது சந்தர்ப்பவாதம். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. மதவாத பாஜக-வுடன் அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அதிமுக கட்சிக்கும் ஆபத்தானது. அதிமுகவின் இந்த சந்தர்ப்பவாத முடிவை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என சிபிஎம் ட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.