கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்ப்பட்ட 34வது வார்டு வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 18 சென்ட் பூங்கா இடத்தை மனை பிரிவு உரிமையாளரே கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமித்து உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் E2 காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை இடித்து அப்பகுதியை மீட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தினை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த வாரம் வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நடராஜன் என்பவர் 18 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் செட் அமைத்து அப்பகுதியில் மாடுகளை கட்டி தொழில் செய்து வந்தார். பின்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று அதிகாரிகளால் அப்பகுதியை மீட்டனர். அதேபோல், மற்றொரு பகுதியில் வீடு ஒன்று கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தகவல் அறிந்து அதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 4 கோடி ரூபாய் மதிப்புடைய ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.