ஈஷாவுக்கு வந்த BNI-ஐ சேர்ந்த இளம் தொழிலதிபர்கள் - உடல், மன நல யோகா வகுப்புகளில் பங்கேற்றனர்!

BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டரை சேர்ந்த 25க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட பல்வேறு சக்திவாய்ந்த யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். மன அழுத்தம் குறைந்து உடல் நலமாக இருப்பதாக உணர்வதாக பயிற்சியில் பங்கேற்ற தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


கோவை: ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த கோவை BNI-ஐ சேர்ந்த இளம்‌ தொழிலதிபர்கள்,‌ உடல்‌ மற்றும்‌ மன நலத்தை மேம்படுத்தும்‌ யோகா மற்றும் ஈஷா ஒரியா வகுப்புகளில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழில்‌ உலகில்‌ சக்கி வாய்ந்த பின்புலம்‌ உடைய BNI அமைப்பின்‌ கோவை ரிதம்‌ சேப்டர்‌-ஐ சேர்ந்த 25-க்கும்‌ மேற்பட்ட இளம்‌ தொழிலதிபர்கள்‌ ஈஷா யோகா மையம்‌ வந்து யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்‌.



ஈஷா சார்பில்‌ இரண்டு நாள்‌ பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள்‌ வழங்கப்பட்டன. மேலும்‌ ஆதியோகி திவ்யதரிசனம்‌, தியானலிங்கத்தில்‌ நாத ஆராதனை, லிங்க பைரவியில்‌ அபிஷேகம்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ மாட்டுமனை உள்ளிட்ட நிகழ்வுகளில்‌ பங்கேற்றனர்‌.

BNI என்பது உலகளவில்‌ 75 நாடுகளில்‌ 300,000 உறுப்பினர்களை உடைய உலகின்‌ முன்னணி வணிக பரிந்துரை அமைப்பாகும். BNI உறுப்பினர்கள்‌ பிராந்திய தேசிய மற்றும்‌ உலகளாவிய BNI ஊழியர்களால்‌ தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள்‌. அவர்கள்‌ தங்கள்‌ வணிகங்களை வளர்ப்பதற்கும்‌, தங்களுடைய இலக்குகளையும்‌ தாண்டி சாதிப்பதற்கும்‌ தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும்‌ தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்‌.

இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள்‌ மூலம்‌ அவர்களின்‌ உடல்‌ மன நலம்‌, திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள்‌ கிடைக்கப்‌ பெற்றதாக மகிழ்ச்சியுடன்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

ஐங்கரன்‌ டெக்ஸ்டைல்ஸ்‌ உரிமையாளர்‌ அங்கு அய்யப்பன்‌,‌ தனது அனுபவம்‌ குறித்து பேசியதாவது, எனக்கு எப்போதும்‌ மன அழுத்தம்‌, டென்சன்‌ இருக்கும்‌. இங்கு வந்து இன்று காலை யோக பயிற்சிகள்‌ செய்த போது நிறைய மாற்றம்‌ தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம்‌ உள்ளிட்ட பயிற்சுகளை செய்து வந்தால்‌ குடும்ப வாழ்க்கை, தொழில்‌ என எல்லாவற்றிலும்‌ திறம்பட இயங்க முடியும்‌ என்று புத்துணர்வோடு பகிர்ந்து கொண்டார்‌.

பேபி வேர்ல்ட்‌ உரிமையாளர்‌ அமர்‌ கூறியதாவது, இது மிகவம்‌ வித்தியாசமான அனுபவம்‌. இந்த பயிற்சிகளை தொடர்ந்தால்‌, தொழில்‌ மற்றும்‌ வாழ்க்கையில்‌ முன்னேற்றம்‌ ஏற்படும்‌. இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும்‌ வித்தியாசமாகவும்‌, சத்தானதாகவும்‌ இருந்தது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்‌.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...