கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர்கள் தின விழா நடைபெற்றது. இதில் தாய் அல்லது தந்தையை இழந்த 300 குழந்தைகளுக்கு பள்ளிப் பொருட்கள், ஒன்பது விதவை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள், 300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், 300 கட்டிடத் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், 250 தினக்கூலி தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது. பி.ஜே.எம்.எம். மாநிலத் தலைவர் பாண்டித்துரை ஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


Coimbatore: கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர்கள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.



விழாவுக்கு பி.ஜே.எம்.எம். மாநிலத் தலைவர் பாண்டித்துரை ஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெ. புவனேஸ்வரன் ஜி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் கே.எஸ். சுப்பிரமணியன், தெற்கு மாவட்டத் தலைவர், ஸ்ரீரங்கம் மாவட்ட துணைத்தலைவர்கள் சதீஷ் ராஜா, டேவிட் பிரபாகரன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சைலு ஆண்டனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் தாய் அல்லது தந்தையை இழந்த 300 குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமெண்ட்ரி பாக்ஸ் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. ஒன்பது விதவை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்களும், ஏழு பேருக்கு இஸ்திரி பெட்டிகளும் வழங்கப்பட்டன.

மேலும், 300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய சீருடைகளும், 300 கட்டிடத் தொழிலாளர்களுக்கு தொழிலுக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. தினக்கூலி வேலை செய்யும் 250 தாய்மார்களுக்கு சேலைகளும், விழாவில் பங்கேற்ற 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யாதவர்களுக்கு நிர்வாகிகள் மூலம் பதிவு செய்து தரப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், கோவை நகைப் பட்டறை தொழிலாளர்களுக்கு தவெக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான ஆர்டர்களை வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும், மாதம் ஒரு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் பரதநாட்டியம், பறை இசைக்குழுவினரின் பறை இசை மற்றும் சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்டம் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...