கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரனுக்குச் சொந்தமான இந்த குடோனில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்களும் இயந்திரங்களும் எரிந்து சாம்பலாகின. 6 தீயணைப்பு வாகனங்களும் கோவை மாநகரக் காவல் துறையின் தண்ணீர் பீரங்கி வாகனமும் பயன்படுத்தி 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பகுதி முழுவதும் கருப்பு புகைமூட்டம் பரவி பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


Coimbatore: கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் பகுதியில் இயங்கி வந்த பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் தொடர்ந்து போராடி இந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர்.



கோவை காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரனுக்குச் சொந்தமான 'வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோன்', வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த குடோனில் திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ கண நேரத்தில் குடோன் முழுவதும் மளமளவெனப் பரவி அசுர வேகத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வடவள்ளி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கோவை மாநகரக் காவல் துறையின் பிரத்யேகத் தண்ணீர் பீரங்கி வாகனம் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தொடர் போராட்டத்திற்குப் பிறகு தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கரத் தீ விபத்தால் சின்மயா நகர் மற்றும் வீரகேரளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த கருப்புகைப் மூட்டமாகக் காட்சி அளித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.

இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...