கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் ர.வெற்றிசெல்வன் முன்னிலையில் செப்டம்பர் 18, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் 15 அன்று மேயர் தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூடத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Coimbatore: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் ர.வெற்றிசெல்வன் முன்னிலையில் இன்று (18.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேயர் ரங்கநாயகி தலைமையில், 15.09.2026 அன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூடத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ரவி தேஜா அறிவுறுத்தினார்.
முன்னதாக, கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அணைக்கட்டு முதல் குறிச்சி அணைக்கட்டு வரை தன்னார்வலர்கள் மூலம் நொய்யல் ஆறு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ் (பொ), செயற்பொறியாளர் ஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ்(பொ), உதவி பொறியாளர்கள் சபரிராஜ், நவநீதகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.