மோட்டார் சைக்கிளில் பகுதி தென்னிந்தியாவை வலம் வந்த இளைஞர்கள்

அன்றை நாளில் ஏதேனும் மலைப்பகுதிக்கு சென்று விட்டு பொழுதை கழிக்கலாம் என நினைத்து, டோனி ராஜ், விநாய்க் ராம், விஜய்சாம்ராஜ், அஜய்குமார் ஆகியோர் இரண்டு இரு சக்கரவாகனங்களில் சத்தியமங்கலம் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது வந்த அலைபேசியின் அழைப்பால், இந்தப் பயணமானது வெகுதூரம் நீண்டது.



அதாவது, சத்தியமங்கலம் மலைப்பகுதி வரை என முடிவு செய்யப்பட்டு தொடங்கிய அவர்களின் பயணம், பிறகு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் சென்றது. முதலில் பிலிகிரிரங்கா மலைப்பகுதிக்கு சென்ற நால்வரும், அங்கு நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை கண்டு ரசித்தனர். நீண்ட நேரம் அங்கு நேரம் கழித்ததால், இருள் சூழ்ந்தது. இதனால், அருகே இருந்த பெட்ரோல் பங்கில் தங்கிவிட்டு, மறுநாள் 2-வது நாள் பயணத்தை தொடங்கினர்.



கர்நாடகாவில் பல்வேறு இடங்களை கண்டு ரசித்த அவர்கள், கர்நாடக வனப்பகுதியில் அதிகளவு கொசு இருப்பதால், அன்றுமட்டும் இரவு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். பின்னர், அடுத்தநாள் சாலையோரத்தில் உள்ள ரோட்டுக்கடையில் தங்களது காலை உணவை நிறைவு செய்தனர். தொடர்ந்து, ஹம்பி பகுதியில் உள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் சூரிய உதயமான அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர். அங்கிருந்து மெதுவாக நகர்கையில், மழை வெளுத்து வாங்கியது. 

இந்த சூழலில் ஹம்பி பகுதியில் இருந்து நகர முடியாத நிலையில், அருகில் இருந்த ஹோட்டலில் தங்கினர். பின்னர், அலுவலக பணி இருந்ததால், நான்கு பேரும் இரண்டு அணிகளாக பிரிந்தனர்.  ஒரு அணி, பணி விஷயம் காரணமாக அனந்தபுராவிற்கு சென்றது.  இதனால்,  எஞ்சிய 2 பேர் அருகில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, அந்த ஆறு மிகவும் அபாயகரமானது, நிறைய பேர் உயிரிழந்திருப்பதாக    அந்தப் பகுதியைச் சேர்ந்த  வயதான பெரியவர் கூறியதால், அவர்கள் அங்கிருந்து காந்திஹோட்டா பகுதிக்கு புறப்பட்டு சென்று, கூடாரம் அமைத்து தங்கினர்.



பின்னர், நால்வரும் இரவு 8 மணியளவில் மலையேறும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர பொழுதுபோக்கிற்கு பிறகு, அவர்களது கூடாரங்களில் தூங்கினர். அதிகாலை எழுந்த போது, அனைவரும் கண்ட சூர்ய உதயமானது, மிகவும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. அப்போது, பாறைகளில் இருந்து பறந்தபடியே நால்வரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 



தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு நால்வரும் சொந்த ஊர் திரும்பும்போது, திடீரென அவர்களது வாகனம் பழுதடைந்தது. அதனை சரிசெய்துவிட்டு, கர்நாடகா, ஆந்திரா எல்லையில், அன்றை இரவை கழித்தனர். பின்னர், மறுநாள் பெங்களூரூ சென்று ஷாப்பிங்கை முடித்துவிட்டு, நேராக ஒசூர் வழியாக சொந்த ஊரான கோவைக்கு வந்தடைந்தனர்.



Newsletter

கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அ...