மியான்மரை அடைந்த கோவை எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள்

கோவையைச் சேர்ந்த மீனாக்ஷி அரவிந்த், பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜகோபால் ஆகிய 'எக்ஸ்பிடியன்ஸ்2470' பெண்கள் கோவையில் இருந்து லண்டனிற்கு காரிலேயே செல்ல திட்டமிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவையில் இருந்து கார் மூலம் புறப்பட்டனர்.

அந்த பெண்கள், இந்தியா சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் நிறைவுபெற்றதின் நினைவாக 70 நாட்களில் 24 நாடுகளை கடக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், ரோட்டரி இந்தியன் லிட்ரசி மிஷன் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தினையும் முன்வைத்து இப்யணத்தை மேற்கொள்கின்றனர். அதன்படி இன்று வெற்றிகரமாக மியான்மரை அடைந்துள்ளனர்.

இவர்களை மனிப்பூர் ஆளுநர் நெஞ்மா ஹெப்துல்லா, பிரைட் ஆஃப் இந்தியா ஒலிம்பிக் மேரி கோம் மற்றும் இம்பால் ரோட்டரியன்ஸ், மனிப்பூர் ஆகியோர் இணைந்து ரோட்டரி எக்ஸ்பிடி2470 குழுவினரை கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் வரும் ஜுன் 5ம் தேதியன்று லண்டனை அடைய திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அ...