8 ஆயிரம் ரூபாயில் கோவை முதல் சிம்லா வரை பயணம்


8 ஆயிரம் ரூபாயில் கோவை முதல் சிம்லா வரை பயணம் என்பதை சாத்தியமில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா..! இது உங்களிடம் மட்டும் ஏற்படும் எண்ணமல்ல. அனைவரிடத்திலும் ஏற்படும் பொதுவான கருத்தே.

பயணம் என்பது அதிகம் செலவாகும் விசயம் என பரவலாக மக்கள் மத்தியில் கருத்து இருந்து வருகிறது. என்னைக் கேட்டால், நான் அப்படி இல்லை என்றுதான் கூறுவேன். இதை என் பயணத்தின் செலவுகளுக்கான கணக்கை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

உணவுக்காக நான் செலவிட்ட தொகை

நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் உணவுக்காக செலவளித்தேன். மொத்தம் 11 நாட்களுக்கு உணவுக்கான செலவு 2900 ரூபாய் மட்டுமே.

பயணத்திற்கான செலவுகள்:

ரயில் கட்டணம்

கோவை - குவாலியார் = ரூ.795

குவாலியார் - சண்டிகர் = ரூ.305

சிம்லா - கல்கா = ரூ.260

கல்கா - புதுதில்லி = ரூ.120

புதுதில்லி - கோவை = ரூ.850

பேருந்து பயணச் செலவுகள்

சண்டிகர் - மனாலி = ரூ.350

மனாலி - சிம்லா = ரூ.395

ரோத்தன்லா = ரூ.500

பயணத்திற்கான மொத்த செலவு 3575 ரூபாய்

தங்குமிடம், பயணம் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் சேர்த்து 7900 ரூபாய்.

எண்ணைப்போன்று வேறொரு பயணியான நொமான்டிக் மேட் என்பவர் பயணம் குறித்து சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார். அதனடிப்படையிலேயே குறைந்த செலவில் கோவை முதல் சிம்லா வரை என்னால் பார்க்க முடிந்தது.

பயணம் குறித்த சில ஆலோசனைகள்

1. பயணம் குறித்து முன்னறே திட்டம் தயாரிக்க வேண்டும்



2. நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது அப்பகுதி மக்களைப்போலவே வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.



3. பயணத்தின் போது விடுதி உணவு உள்ளிட்டவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்



4. பயணம் மேற்கொள்ளும் பகுதியில் நண்பர்கள், உறவினர்கள் உள்ளனரா என தெரிந்திருக்க வேண்டும்.




5. பயணம் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்.




6. இரவு நேர பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்குமிடத்தின் செலவினைக் குறைக்கலாம்.




7. பொதுபோக்குவரத்து சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.




8. மற்ற வாகனத்தில் உதவி கேட்டு பயணிக்கலாம்.



இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும், எப்படி குறைந்த செலவில் வெகுதூர பயணம் மேற்கொள்வது என்று. இதனை முயற்சித்து நீங்களும் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்திடுங்கள்.

Newsletter

கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அ...