விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடனும், சாகச விளையாட்டுடனும் கழிக்க கோவையில் ஒரு புதிய இடம் வந்தாச்சு..!


கோவை வாளையாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், மவுதம்பதி பகுதியில் உள்ள கண்ட்ரி கிளப் ரிசார்ட்டிற்கு பின்புறம், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் அட்வென்ட்சர் நிறுவனம் மற்றும்  à®µà®© ஆராய்ச்சியாளர்கள் அகாடமி இணைந்து நல்ல பொழுது போக்கு அம்சங்கள் கூடிய இடத்தை உருவாக்கியுள்ளனர். 

வாளையாறு ஏரியை ஒட்டியுள்ள இந்த இடத்தில் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும், முகாம்கள், சுற்றுச்சூழல் மற்றும் ஆளுமை திறனை மேம்படுத்துவது உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு நடந்து செல்லும் தூரத்தில், குளிப்பதற்கான நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 



பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பொழுதை கழிப்பதுடன், இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள இந்த இடம் சரியான தேர்வாகும். மேலும், கோவை மற்றும் வாளையாறு பகுதி மக்களின் சாகச விளையாட்டுகள், பொழுதுபோக்குகளின் தாகத்தை தீர்க்கும் இடமாக இது இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 



இந்த முகாம் குறித்து மேலாளர் எம்.கே. வந்தன் பேசுகையில், எங்களது நிறுவனத்தின் 2-வது பிரிவு பயிற்சி பள்ளிக்கு ”வனப்பகுதி பள்ளி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், இளம் இந்தியர்களின் அதிகாரம் மற்றும் தலைமைப் பண்பை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் குழுவாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இந்த முகாமிற்கு வருபவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு கையாள்வது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது கோவை மக்களுக்கு புதிய அனுபவமாகும். கார்ப்பரேட் நிறுவன சுற்றுலாவிற்கு எங்களது கதவு திறந்தே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 



மேலும், விபரங்களுக்கு,  7010707347/9843425426

Newsletter

கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அ...