3-வது மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருப்பூர் இளைஞன் சாம்பியன்

கோவை : 3-வது மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த இளைஞன் சாம்பியன் பட்டம் வென்றார்.


கோவை : 3-வது மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த இளைஞன் சாம்பியன் பட்டம் வென்றார்.



நேரு கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு ஃபிட்னஸ் கூட்டமைப்பு இணைந்து 3-வது மாநில அளவிலான உடல் கட்டழகு போட்டியை நடத்தியது. ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் நடத்தப்பட்ட இந்தப்போட்டியில், 2 பெண்கள் உள்பட 180 மேற்பட்ட வீர்கள் கலந்து கொண்டனர். 

23 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவில் 60 கிலோவுக்கு கீழ், 70 கி., 80 கி. மற்றும் 23 வயதுக்கு மேற்பட்ட சீனியர் பிரிவில் 60 கிலோவுக்கு கீழ், 65 கி.,70 கி., 75 கி., 80 கி. மற்றும் 80 கிலோவுக்கும் அதிகமான உள்ளிட்ட எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. நல்ல உடல் வலிமை மற்றும் உடல்வாகு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.



பெண்கள் பிரிவு சென்னையைச் சேர்ந்த ஜெயா அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை சக மாவட்ட வீராங்கனை ஸ்ருதி பிடித்தார். 



இதேபோல, ஆண்கள் ஜூனியர் பிரிவில் கோவையை சேர்ந்த பிரசாந்த் (50 கி.), சேலத்தைச் சேர்ந்த ராகுல் (60 கி.), கோவையை சேர்ந்த தவசீலன் (70 கி.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.



ஆண்கள் சீனியர் பிரிவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரைட்சன், எம்.பிரதீப் (கோவை), வி. பிரசாந்த், எம். தினேஷ் பாபு (திருச்சி), பிரதீப் (திருப்பூர்), ஆர். தவசீலன் (கோவை) ஆகியோர் பட்டம் வென்றனர்.

வெற்றிபெற்றவர்களுக்கு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Newsletter