ஜே.கே.டயர் யூரோ ஜே.கே 18 கார் பந்தயத்தில் சென்னை வீரர் முன்னிலை

கோவை : தேசிய அளவிலான ஜே.கே.டயர் யூரோ ஜே.கே 18 கார் பந்தயத்தில் சென்னை வீரர் கார்த்திக் தரணி சிங் முன்னிலை பெற்றார்.


கோவை : தேசிய அளவிலான ஜே.கே.டயர் யூரோ ஜே.கே 18  கார் பந்தயத்தில் சென்னை வீரர் கார்த்திக் தரணி சிங் முன்னிலை பெற்றார்.



தேசிய அளவிலான ஜே.கே.டயர் கார் பந்தயங்களின் மூன்றாவது சுற்று கார் பந்தயத்தின் இரண்டாவது நாளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றன. நோவிஸ் கப் கோப்பைக்கான முதல் போட்டியில் டி.டி.எஸ்.ரேசிங் அணியைச் சேர்ந்த கோழிக்கோடு வீரர் ஹாசிம் முதல் இடத்தையும், மொமண்டம் மோட்டர் ஸ்போர்ட்ஸ் பெங்களூரு வீரர் டிஜில் ராவ் இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த கோவை வீரர் சூர்யவரதன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இரண்டாவதாக நடைபெற்ற எல்.ஜி.பி. பார்முலா ஃபோர் கார் பந்தயத்தில் கோலாப்பூர் வீரர் சித்தேஷ் மண்டோடி முதலிடத்தையும், டார்க் டான் அணியைச் சேர்ந்த கோவை வீரர் சரோஷ ஹட்டாரியா இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த பெங்களூரு வீரர் ஷோகில் ஷா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 



தொடர்ந்து, மூன்றாவதாக நடைபெற்ற யூரோ ஜே.கே 18 போட்டியில், யூரோ இண்டர்நேஷனல் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் கார்த்திக் தரணி முதல் இடத்தையும், மஹாராஷ்டிரா அணி வீரர் நயன் சட்டர்ஜி இரண்டாம் இடத்தையும், அஸ்வின் தத்தா மூன்றாம் இடத்தை பிடித்தனர். 4-வதாக நடந்த மற்றொரு யூரோ ஜே.கே.18 போட்டியில் சென்னை வீரர் நிர்மல் உமாசங்கர் முதலிடத்தையும், இலங்கை வீரர் பிரயன் பெரேரா இரண்டாம் இடத்தையும், பெங்களூரு வீரர் யாஷ் ஆரத்தயா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 



ஐந்தாவதாக நடந்த சுசூகி சிக்ஸர் இருசக்கர வாகன போட்டியில் சென்னை வீரர் ஜோசப் முதலிடத்தையும், ஆஸ்வால் வீரர் மால்சம் சாங்கிலியானா இரண்டாவது இடத்தையும்,பெங்களூரு வீரர் சையது முசாம்பில் அலி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். கடைசியாக நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா ஃபோர் கார் பந்தயத்தில் அவலான்ச்சி ரேசிங் அணியைச் சேர்ந்த கோலாப்பூர் வீரர் சித்தேஷ் மண்டோடி முதலிடமும், டார்க் டான் அணியை சேர்ந்த கோவை வீரர் சரோஷ்ஹட்டாரியா 2ம் இடமும், எம்.ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி மூன்றாம் இடமும் பிடித்தனர். 



மொத்தம் 76 பந்தய வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 6 பெண்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 2.1 கி.மீ. à®šà¯à®±à¯à®±à®³à®µà®¿à®²à¯ 14 வளைவுகள் கொண்ட கரி மோட்டர் ஸ்பீட்வேவில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். போட்டிகளின் நடுவே 25 ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வரப்பட்டதும், ஸ்டண்ட் ஷோவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதி மற்றும் நான்காம் சுற்று போட்டிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நொய்டாவில் உள்ள புத் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் அந்தந்த பிரிவில் வெற்றி பெற்ற தேசிய வீரர்களாக அறிவிக்கபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter