பெண்களுக்கான அண்ணா பல்கலை., வாலிபால் போட்டிகள் தொடக்கம்

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கியது.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கியது. 



கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 19 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 400 வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் மண்டல அளவில் வெற்றி பெற்ற 38 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்டன. இதனை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கே. பொம்மண்ணா ராஜா, உடற்கல்வி இயக்குநர் பி.தம்பிதுரை மற்றும் துணை உடற்கல்வி இயக்குநர் ஆர். ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.



முதல்நாள் போட்டியில், பனிமலர் பொறியியல் கல்லூரி, செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.  

Newsletter