பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்

கோவை : சஹோதயா பள்ளியின் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கியது.

கோவை : சஹோதயா பள்ளியின் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கியது. 



சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் அங்கமான கோவை சஹோதயா பள்ளியின் சார்பில் மாணவர்களிடம் இருக்கும் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இந்தப் போட்டியை அப்பள்ளியின் செயலாளர் கீதா லட்சுமி தொடங்கி வைத்தார். 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 87 பள்ளிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியாக நடத்தப்படும் இந்தக் கூடைப்பந்து போட்டியில், யு14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 



முதல்நாளான இன்று, ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அணிகள் மோதின. இத் தொடரின் இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடக்கிறது. 

Newsletter