பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 



சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், பி.எஸ்.ஜி., கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த பார்க் கல்லூரி அணி 98 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்குடன் களமிறங்கிய பி.எஸ்.ஜி. அணி, தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 9 விக்கெட் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 



பி பிரிவில் நடைபெற்ற 3.வது இடத்திற்கான போட்டியில் அரசு கல்லூரி அணி, பிஷப் ஆம்புரோஷ் கல்லூரியை அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சங்கரா கல்லூரியின் முதல்வரும், உடற்கல்வி இயக்குநருமான முனியசாமி கோப்பைகளை வழங்கினார். அதேபோல, முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உள்மண்டல போட்டிகளில் பங்கேற்க உள்ளன.



Newsletter