அண்ணா பல்கலை.,யின் மண்டல அளவிலான கபடிப் போட்டியில் மகுடம் சூடியது கே.ஐ.டி., கல்லூரி அணி

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல லெவன் கபடி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல லெவன் கபடி போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இத் தொடரில், கோப்பை யாருக்கு எனத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில், அதிரடியாக ஆடிய கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி அணி 40-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி அணி 45-42 என்ற புள்ளிகள் கணக்கில் என்.ஜி.பி., பொறியியல் கல்லூரியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பொம்மண்ணராஜா கோப்பைகளை வழங்கிக் கவுரவித்தார். வெற்றி பெற்ற அணி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மண்டல போட்டியில் பங்கேற்க இருக்கிறது. 

Newsletter