மாநில அளவிலான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.ஜே., பிரதர்ஸ் அணி சாம்பியன்

கோவை : மாநில அளவிலான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.ஜே., பிரதர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


கோவை : மாநில அளவிலான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.ஜே., பிரதர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 



பி.ஜே., பிரதர்ஸ் மற்றும் எஸ்.கே., பிரதர்ஸ் இணைந்து மாநில அளவிலான கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று அந்தோணி நர்சரி பிரைமரி பள்ளியில் தொடங்கிய இந்தப் போட்டியில், கோவை, கரூர், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, கரூர், திருச்சி, மானாமதுரை, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 70-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. மேலும், இந்தப் போட்டிகளில் 55 கிலோவிற்கு குறைவான எடையுள்ள வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 



450 வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியின் இறுதியில், கோவையைச் சேர்ந்த பி.ஜே., பிரதர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 

Newsletter