சர்வதேச போட்டியில் பதக்கங்களைக் குவித்த கோவை தீயணைப்பு வீரர்கள்

கோவை : கொரியாவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

கோவை : கொரியாவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.



தென்கொரியாவில் உள்ள ஜுங்ஜு என்ற பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கான 13-வது சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற 80 பதக்கங்களை வென்று குவித்தனர். குறிப்பாக, கோவை விமான நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஏ.பி., திலீப் மற்றும் ஓ.பி. மிதுன் ஆகியோர் 3 பதக்கங்களைக் கைப்பற்றி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

ஏ.பி., திலீப் 4*400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், வாட்டர் போலாவில் வெள்ளியும், கை மல்யுத்தத்தில் வெண்கலத்தையும் ஓ.பி. மிதுன் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய விமான நிலைய அதிகாரசபை பாராட்டு தெரிவித்துள்ளது. 

Newsletter