அண்ணா பல்கலைக்கழக மண்டல லெவன் கிரிக்கெட் போட்டி : சக்தி கல்லூரி அணி சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலைக்கழக மண்டல லெவன் கிரிக்கெட் போட்டியில் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


கோவை : அண்ணா பல்கலைக்கழக மண்டல லெவன் கிரிக்கெட் போட்டியில் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் கோவை நகரில் இருந்து 19 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறைப்படி நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி 20 ஓவர் முடிவில் 157/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ப்ரித்தம் (50), கபின் சஞ்சய் (45), மிதுசந்தர் (33) எடுத்தனர். இதைத்தொடர்ந்து, பேட் செய்த பி.எஸ்.ஜி., அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 135/6 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சக்தி கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆண்டில் மட்டும் சக்தி கல்லூரி அணி 2-வது கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை தலைவர் எஸ். செல்லத்துரை கோப்பைகளை வழங்கினார்.

Newsletter