பி.எஸ்.ஜி நடத்தும் தேசிய கூடைப்பந்து போட்டிகள்

கோவை: பி.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் வரும் 9-ம் தேதி பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்க உள்ளன.

கோவை: பி.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் வரும் 9-ம் தேதி பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்க உள்ளன.

நாட்டில் உள்ள முன்னோடி அணிகள் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. இந்தியாவின் தலைசிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் விளையாட உள்ளனர். லீக் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா மூன்று ஆட்டங்களில் பங்கேற்கின்றன.

லீக் போட்டியின் முடிவில் நான்கு அணிகள் மோதி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன. இந்த போட்டி வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பி.எஸ்.ஜி டிராபி வழங்கப்பட உள்ளன.

Newsletter