தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கோவை மாணவி

கோவை: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.


கோவை: தேசிய அளவிலான à®¤à¯à®ªà¯à®ªà®¾à®•்கி சுடும் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னையில் கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் 28-வது தேசிய அளவிலான à®¤à¯à®ªà¯à®ªà®¾à®•்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் கோவை பி.எஸ்.பி.பி பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி நிவேதிதா தங்கப்பதக்கம் வென்றார்.

கோவை ரைபிள் கிளப்பின் உறுப்பினராக உள்ள இவர் 25 மி.மீ துப்பாக்கி சுடுதலில், ஜூனியர் பெண்கள் பிரிவில் முன்னதாக கலந்து கொண்டார். அதில் புதிய சாதனையாக 287/300 என்ற புள்ளிகளை பெற்றார்.

இது குறித்து அவரது தந்தை சரவணன் கூறுகையில், "என் மகள் வெற்றி பெற்றதற்கு ஒரு தந்தையாக நான் பெருமை கொள்கிறேன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்." என்றார்.

Newsletter