தேசிய கார் பந்தய போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை: இந்திய தேசிய கார் பந்தயத்தின் இறுதி போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது.

சென்னை: இந்திய தேசிய கார் பந்தயத்தின் இறுதி போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது.

மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிரேக்கில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எம்.ஆர்.எப் டயர்ஸ் ஒருங்கிணைத்துள்ளன.



எப்.எல்.ஜி.பி (FLGB) 1300, எம்.ஆர்.எப் 1600, அம்யோ கப் & சலூன் கார்ஸ் (VW Ameo Cup & Saloon Cars) என்ற நான்கு பிரிவில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 20 கார் பந்தய வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

கோவையைச் சேர்ந்த கவுதம் முருகன் என்பவர் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார். "கடந்த சுற்றில் 15-வது இடத்தில் இருந்த நான் போராடி நான்காவது இடத்தைப் பெற்றேன். இந்த இடத்தைப் பிடிப்பதற்கு மிகவும் போராட வேண்டியதாகவே உள்ளது." என்றார் கவுதம்.

Newsletter