கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., அணி சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : à®ªà®¾à®°à®¤à®¿à®¯à®¾à®°à¯ பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.



பி மண்டலப் பிரிவின் கீழ் கடந்த 3-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 19 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்.வி.எஸ்., கல்லூரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், 6-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி எளிதில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 



இதேபோல, இந்துஸ்தான் அணியை தோற்கடித்து அரசு கல்லூரி 3-வது இடத்தைப் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கே. வடிவேலு வழங்கினார். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படாததால், சான்றிதழ்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Newsletter