சர்வதேச சிலம்பம் போட்டியில் பதக்கங்களை வென்ற கற்பகம் கல்வி நிறுவன மாணவர்களுக்குப் பாராட்டு விழா

கோவை : வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற கற்பகம் கல்வி நிறுவன மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை : வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற கற்பகம் கல்வி நிறுவன மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 



வியட்நாம் நாட்டில் 2-வது உலக சிலம்பாட்ட போட்டிகள் கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 27 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ். சூர்யா, எஸ். விக்னேஷ், பி. விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்ட அவர்கள், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றனர். 



இந்த நிலையில், பதக்கங்களை வென்று குவித்த வீரர்களுக்கு கற்பகம் உயர்கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் எஸ். சுடலைமுத்து கலந்து கொண்டு, பதக்கம் வென்றவர்களை கவுரவித்தார். 



Newsletter