அண்ணா பல்கலை., ஜோன்-IX கிரிக்கெட் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை: பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான, அண்ணா பல்கலைக்கழகம் ஜோன்-IX கிரிக்கெட் போட்டிகள் கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

கோவை: பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான, அண்ணா பல்கலைக்கழகம் ஜோன்-IX கிரிக்கெட் போட்டிகள் கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 19 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி (146/5) மற்றும் பி.எஸ்.ஜி ஹை-டெக் கல்லூரி (49/19.2) அணிகள் மோதின. இதில் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் பி.எஸ்.ஜி மற்றும் ஆர்.வி.எஸ் அணிகள் மோதின இதில் பி.எஸ்.ஜி அணி 11.2 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதே போல் அடுத்தடுத்த போட்டிகளில், என்.ஜி.பி பொறியியல் கல்லூரி., கலைஞர் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் முதல் போட்டிகளில் வென்றன. இந்த அணிகள் இன்று நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றன.

Newsletter