கோவையில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி தொடக்கம்

கோவை : 5 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : 5 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது. 



கே.ஜி., ரமேஷ் டென்னிஸ் அகாடமியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டி குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் இன்று தொடங்கியது. 7-ம் தேதி வரும் நடக்கும் இந்தப் போட்டித் தொடரில் பெண்கள், ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, ஒடிசா, தெலுங்கானா மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் 64 வீரர்கள் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த டென்னிஸ் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், அனைத்து இந்தியா டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படும். வெற்றியாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. 

Newsletter