கோவையில் ஜே.கே. டயர் கார் பந்தயம்: தமிழக வீரர்கள் அசத்தல்

கோவை: 21-வது தேசிய அளவிலான ஜே.கே. டயர் கார் பந்தயத்தின் இரண்டாவது சுற்று கார் பந்தயத்தில் தமிழக வீரர்கள் அசத்தியுள்ளனர்.

கோவை: 21-வது தேசிய அளவிலான ஜே.கே. டயர் கார் பந்தயத்தின் இரண்டாவது சுற்று கார் பந்தயத்தில் தமிழக வீரர்கள் அசத்தியுள்ளனர்.



 

செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் 21-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்களின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. 

இந்த போட்டிகளில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் எல்.ஜி.பி பார்மூலா 4, யூரோ ஜே.கே-18 ஆகிய கார் பந்தயங்களும், சுசுகி gixxer cup, ரெட்புல் ரூக்கி கப் இரு சக்கர வாகன பந்தயம், நோவிஸ் கோப்பைக்கான பதினைந்து சுற்று கொண்ட போட்டிகள் நடைபெற்றது.

முதலாவதாக நடைபெற்ற நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் முதலாவது இடத்தை கொச்சின் வீரர் அஸ்வின் நாயரும், இரண்டாவது இடத்தை பெங்களூரு வீரர் டிகில் ராவும், மூன்றாவது இடத்தை கோவை வீரரான யோகஸ்வரன் கிரிஷ்ணவேலுவும் பிடித்தனர்.

எல்.ஜி.பி.பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத்தும், மற்றொரு சென்னை வீரர் ராகுல் ரங்கசாமியும், மூன்றாவது இடத்தை குர்காவன் வீரர் ரோஹித் கண்ணாவும் பிடித்தனர்.



இரண்டாவது போட்டியில் சென்னை வீரர் ராகுல் ரங்கசாமியும், இரண்டாவது இடத்தை விஷ்ணு பிரசாத்தும், மூன்றாவது இடத்தை ரோஹித் கண்ணாவும் பிடித்தனர்.

விபத்து

இந்த போட்டியின் நான்காவது லேப்பில் சென்னை வீரர் நபில் ஹுசைன் பெங்களூரு வீராங்கனை ஷிவானி பிரித்திவி ஆகியோரின் வாகனம் மோதியது.

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யூரோ ஜே.கே-18 போட்டியில் முதல் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தத்தாவும், இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரா வீரர் நயன் சட்டர்ஜியும், மூன்றாவது இடத்தை தமிழக வீரர் கார்த்திக் தரணியும் பிடித்தனர்.

இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் பிரெயன் பெரேராவும், மகாராஷ்டிரா வீரர் நயன் சட்டர்ஜி இரண்டாவது இடத்தையும், சென்னை வீரர் அஸ்வின் தத்தாவும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

இதன் பின்னர் பத்து சுற்றுகள் கொண்ட சுசூகி ஜிக்ஸர் கப் போட்டியில் ஜோசப் மேத்யு முதலிடத்தையும், செய்யது முஸாமில் அலி இரண்டாம் இடத்தையும், சச்சின் சவுத்ரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இந்த போட்டிகளின் இடையே நடைபெற்ற ஸ்டண்ட் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter