கேம்ப்ஃபோர்ட் கோல்டன் பூட்ஸ் கால்பந்து போட்டிகள் 2018

கோவை: கேம்ப்ஃபோர்ட் கோல்டன் பூட்ஸ் கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 30-ம் தேதி கேம்ப்ஃபோர்ட் பள்ளியில் தொடங்கியது. இந்த போட்டியில் கோவையில் இருந்து 30 பள்ளிகள் கலந்து கொண்டன.

கோவை:  கேம்ப்ஃபோர்ட் கோல்டன் பூட்ஸ் கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 30-ம் தேதி கேம்ப்ஃபோர்ட் பள்ளியில் தொடங்கியது. இந்த போட்டியில் கோவையில் இருந்து 30 பள்ளிகள் கலந்து கொண்டன.

இதில், 19 வயதுக்குட்பட்ட பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, தேதி கேம்ப்ஃபோர்ட் பள்ளி, பாரதி மெட்ரிக்குலேஷன், லிஸ்சேக்ஸ் போன்ற பள்ளிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறின. இதே போல், 14 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் கோபால் நாயுடு, இந்தியன் பப்ளிக், தசரதன் ஆகிய பள்ளிகள் முன்னேறின.

19 வயதுக்குட்பட்ட பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ பள்ளி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. 14 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் இந்தியன் பப்ளிக் பள்ளி கோப்பையை வென்றது. 

சிறந்த விளையாட்டு வீரர் என்ற பட்டத்தை அதிக கோல் அடித்த எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மாணவர் ஆதித்யா என்பவரும், மாவூர்கன் என்ற இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவரும் வென்றார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter