கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஜி.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அக்னி, பிருத்வி, ஆகாஷ், திரிசூல் ஆகிய அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் குறுவணக்கம் நடனம், சிறுவர்களின் உடலழகுப் பயிற்சி, மூங்கில் உடல் திறன் பயிற்சி, மகாராஷ்டிரா புகழ் கிராமிய லெஸிம் நடனம், மற்றும் பேண்டு அணிவகுப்பு ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.



பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஆகாஷ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை வென்றது. அக்னி அணி இரண்டாம் இடத்தையும், பிருத்வி அணி மூன்றாம் இடத்தையும், திரிசூல் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் டி.ஐ.ஜி., கார்த்திகேயன் கோப்பைகளையும், கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 

Newsletter