ஆசிய விளையாட்டில் பாய்மர படகு போட்டியில் வெள்ளி வென்ற சென்னை வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டியில் சென்னையைச் சேர்ந்த வர்ஷா மற்றும் அவரது ஜோடி சுவேதாவும் இணைந்து வெள்ளியை வென்றுள்ளனர்.


ஆசிய விளையாட்டு போட்டியில் à®šà¯†à®©à¯à®©à¯ˆà®¯à¯ˆà®šà¯ சேர்ந்த வர்ஷா மற்றும் அவரது ஜோடி சுவேதாவும் இணைந்து வெள்ளியை வென்றுள்ளனர். 



இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 15 சுற்றுகளைக் கொண்ட பாய்மரப் படகு போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பில் à®šà¯†à®©à¯à®©à¯ˆà®¯à¯ˆà®šà¯ சேர்ந்த வர்ஷா (20) என்ற வீராங்கனையுடன், சுவாதா என்பவர் இணைந்து களம் கண்டனர். அனைத்து சுற்றுகளின் முடிவில் 44 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வர்ஷா அணியினர் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளனர். 



சென்னையைச் சேர்ந்த வர்ஷா 2014-ல் இன்ச்சான் ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என 63 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது. 

Newsletter