வரும் 2-ம் தேதி கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான பேண்டு வாத்திய போட்டி

கோவை: கோவை ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேண்டு வாத்திய போட்டி வரும் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.

கோவை: கோவை ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேண்டு வாத்திய போட்டி வரும் 2-ம் தேதி நடத்தப்படுகிறது. 

கணுவாயில் உள்ள யுவபாரதி பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா கலந்து கொள்ள இருக்கிறார். செப்., 2-ம் தேதி நடக்கும் பேண்டு வாத்திய போட்டியானது இரு பகுதிகளாக நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கும் முதல் பகுதியில் 14 அணிகளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கும் 2-வது பகுதியில் 13 அணிகளும் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்ய 20 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோவை ரோட்டரி கிளப்பின் தலைவர் ஜோசப் பால் கூறுகையில், "கோவை ரோட்டரி கிளப்பின் 70-வது ஆண்டு விழாவையொட்டி கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து பேண்டு வாத்திய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 27 பள்ளிகளில் இருந்து ஆயிரம் மாணவர்கள் அடங்கிய 23 அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இதில், புதுச்சேரியில் இருந்து ஒரு அணியும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது," என்றார். 

Newsletter