இந்திய யு19 கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திருப்பூர் வீரர்

திருப்பூர்:19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு திருப்பூரைச் சேர்ந்த வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு திருப்பூரைச் சேர்ந்த வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் தேர்வாகியுள்ளார். 

வரும் செப்., 12-ம் தேதி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், திருப்பூரைச் சேர்ந்த 17 வயதான பிரதோஷ் ரஞ்சன் பால் தேர்வாகியுள்ளார். 



இடது கை வீரரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு உள்ளூர் போட்டித் தொடர்களில் கலக்கி வருகிறார். தென்மண்டல தொடரில் மொத்தம் 750 ரன்க்ளை குவித்து, அனைவரது பார்வையையும் தனது பக்கம் திருப்பினார் பிரதோஷ் ரஞ்சன் பால்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் வாரிய மேலாளர் என். வேல்முருகன் கூறுகையில், "யு19 இந்திய அணிக்கு பிரதோஷ் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருப்பூரில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதோஷ் சிறந்த முன்னுதாரானமாக திகழ்வார்," என்றார். 

 

 "9 வயதில் நான்  கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தேன். பனிரெண்டு வயதில் மாவட்ட யு14 அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டு, நான் மாநில அணிக்கும் தேர்வாகினேன். மாநில அளவிலான போட்டியில் 3 இரட்டை சதங்களை விளையாசியது என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது," என்கிறார் பிரதோஷ் ரஞ்சன் பால்.

மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவதே தனது இலக்கு எனக் கூறிய அவர், சீனியர் இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்புவதாகவும் கூறினார். 

Newsletter