ஆசிய விளையாட்டுப் போட்டி : ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் அணிக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பதக்கங்களை வென்றன.

ஆசிய விளையாட்டு போட்டியில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பதக்கங்களை வென்றன. 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இதேபோல, இந்திய ஆண்கள் அணி வெள்ளி வென்றது. இன்றைய போட்டிகளில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுஒருபுறம் இருக்க, இந்திய ஆக்கி அணி மலேசியாவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்துள்ளது.

இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி மற்றும் 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன், 9-வது இடத்தில் இருந்த இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Newsletter