ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார் அர்பிந்தர் சிங்

ஆசிய விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர்சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


ஆசிய விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் அர்பிந்தர்சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்து வருகின்றனர். இன்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டிசந்து வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோல, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல், மணிகா ஆகியோர் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுக் கொடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர்சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், 10 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 53 பதகங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் à®‰à®³à¯à®³à®¤à¯. 

Newsletter