முழுவீச்சில் தயாராகி வரும் கோவை நேரு விளையாட்டரங்கு கால்பந்து மைதானம்

கோவை : நேரு விளையாட்டரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை மறுசீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கோவை : நேரு விளையாட்டரங்கில் உள்ள கால்பந்து மைதானத்தை மறுசீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 



கடந்த ஆண்டு கோவை நேரு விளையாட்டரங்கு கால்பந்து மைதானத்தில் ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த மைதானத்தை சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி சொந்த மைதானமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டித் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதனால், கோவை நேரு விளையாட்டரங்கு கால்பந்து மைதானத்தை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக, புற்கள் நடுதல் மற்றும் மைதானத்தின் பரப்பை சமன் செய்தல் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



இந்தப் பணிகள் முடிந்து, விரைவில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக மைதானம் விடப்படும் எனத் தெரிகிறது. கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் 12 போட்டிகள் கோவை நேரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter