ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற திருப்பூர் வீரருக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகை

திருப்பூர்: இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற திருப்பூரைச் சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


திருப்பூர்:  à®‡à®¨à¯à®¤à¯‹à®©à¯‡à®šà®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற திருப்பூரைச் சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

திருப்பூரைச் சேர்ந்த ஆசிரியையின் மகன் தருண் அய்யாசாமி (21). சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தடகளப் போட்டிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்த நிலையில், ஜகர்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தருண் அய்யாசாமி கலந்து கொண்டார். 

 

இந்தப் போட்டியில் முதல் 300 மீட்டருக்கு 4-வதாக வந்து கொண்டிருந்த அவர், கடைசி 100 மீட்டரில் 2-வதாக இலக்கை எட்டி வெள்ளியை வென்றார். மொத்தம் 48.96 வினாடிகளில் இலக்கை வந்தடைந்தார். தருண் இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடந்த பெடரேசன் கோப்பையில் 49.45 வினாடிகளில் இலக்கைக் கடந்ததே சாதனையாக இருந்தது. 

"தருணை நினைத்து மிகவும் பெருமையடைகிறோம். பதக்கம் பெறுவதற்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார். தருணிடம் இருக்கும் திறமையை அவரது முதல் பயிற்சியாளர் சக்தியகுமார் தான் கண்டுபிடித்து, வெளிக் கொண்டு வந்தார். எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்," எனக் கூறினார் தருணின் தாய் பூங்கொடி.



தருணின் முதல் பயிற்சியாளர் சக்தியகுமார் கூறுகையில், "இந்த வயதில் கடினமாக உழைக்கும் நபரை தேர்வு செய்வது மிகவும் அரிதான ஒன்று. அவரது பணியில் நேர்மையாகவும், திறனை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். 5-ம் வகுப்பு முதல் தனது தடகள வாழ்க்கையை தொடங்கிய தருண் அய்யாசாமி, தற்போது வரை திறனை மேம்படுத்திக் கொள்வதில் சோர்ந்து போகவில்லை," என்றார். 

இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தடகள வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 



Newsletter