ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. 

இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நீரஜ் சோப்ரா 3-வது முயற்சியில் 88.06 மீட்டர் வரை ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இவரைத் தொடர்ந்து, சீன வீரர் குயிஸ்சென் லியு 82.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 80.75 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியாவின் குர்தேஜ் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.

அதன்பின் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter