3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : சீஹாக்ஸ் அணி த்ரில் வெற்றி

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனம் அணியை, சீஹாக்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனம் அணியை, சீஹாக்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

பொள்ளாச்சி என்.பி.டி., கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த என்.ஐ.ஏ., கல்வி நிறுவனம் அணி 38.5 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வி. கார்த்திக் (ஆட்டமிழக்காமல் 59), எம். ஆஷிக் குமார் (36) எடுத்தனர். சீஹாக்ஸ் அணி சார்பில் பி. நந்தகுமார் 4 (30) விக்கெட்டுகளையும், எம். அருண் குமார் 3(22) விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய சீஹாக்ஸ் அணியினர் சீரான விக்கெட்டுக்களை இழந்தனர். இறுதியில் ஒரு விக்கெட் மட்டும் எஞ்சிய நிலையில், 45.4 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம், அந்த அணி இந்த சீசனில் தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. சீஹாக்ஸ் அணியில் அதிகபட்சமாக வி. ஸ்ரீஹரி (35), எஸ். சபரி சதீஷ் (34) எடுத்தனர். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனம் சார்பில் டி. கோகுலகிருஷ்ணன் 5 (21) விக்கெட்டுகளையும், எம். அசோக் குமார் 3 (26) விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சீஹாக்ஸ் அணி இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், அபாரமாகப் பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய என்.ஐ.ஏ., கல்வி நிறுவன அணியின் டி. கோகுலகிருஷ்ணன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Newsletter