மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் வி.எல்.பி., மற்றும் கே.சி.டி., அணிகள் வெற்றி

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் வி.எல்.பி., மற்றும் கே.சி.டி., அணிகள் வெற்றி பெற்றன.

கோவை: கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் வி.எல்.பி., மற்றும் கே.சி.டி., அணிகள் வெற்றி பெற்றன. 

ரத்தினபுரி கோ-கோ கிளப் சார்பில் எம்.ஜி.எம்., பள்ளியில் 2 நாட்கள் நடக்கும் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளை கோவை கோ-கோ- போட்டியின் கூட்டமைப்பு துணை தலைவர் எம். சுப்ரமணி தொடங்கி வைத்தார். 



இன்று தொடங்கிய இந்தப் போட்டித் தொடரில் 8 கல்லூரி அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணி 17-03 என்ற புள்ளிகள் கணக்கில் பி.எஸ்.ஜி., தொழிற்நுட்பக் கல்லூரி அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், கே.சி.டி., அணி, சி.ஐ.டி., அணியை 10-09 புள்ளிகள் கணக்கில் போராடி வென்றது. இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கான அடுத்த சுற்றுப் போட்டிகள் நாளை நடக்கிறது. 



Newsletter