ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 5வது தங்கத்தை வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

தொடர்ந்து இரட்டையர் படகுப் போட்டி பிரிவில் இந்தியாவின் ரோஹித் குமார் மற்றும் பகவான் தாஸ் ஜோடியும் வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்கம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 12 வது வெண்கல பதக்கம் இதுவாகும். படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter