அண்ணா பல்கலை., கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி : மகுடம் சூடிய பி.எஸ்.ஜி., அணி

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அளவிலான கால்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 16 கல்லூரிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளுக்கு பிறகு, என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லூரியும், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தப் போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

இதேபோல, 3-வது இடத்தை ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியும், 4-வது இடத்தை கதிர் பொறியியல் கல்லூரியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு என்.ஜி.பி., கல்வி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஓ.டி., புவனேஸ்வரன் பரிசுகளை வழங்கினார். 

Newsletter