வரலாற்று சாதனை வெற்றி கேரள மக்களுக்கு சமர்ப்பணம்: விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கினர். ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter