கோவை கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கிய பத்ரிநாத்

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (சி.டி.சி.ஏ) ஆண்டு விழாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விருதுகளை வழங்கினார்.

கோவை: கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (சி.டி.சி.ஏ) ஆண்டு விழாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விருதுகளை வழங்கினார்.

சி.டி.சி.ஏ அமைப்பின் 60-வது ஆண்டு விழா நேற்று கோவையில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் விருதுகளை வழங்கினார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், "டி.என்.பி.எல் போன்ற மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சி.டி.சி.ஏ. நிறைய கிரிக்கெட் வீரர்களை வழங்கியுள்ளது. இளம் வீரர்கள் கடினமாக உழைத்தால் தான் விளையாட்டிலும் சிறந்தவராக இருக்கமுடியும். என் வாழ்க்கையில் நான் கடினமாக முயற்சி செய்தேன், கடினமாக உழைத்தேன், அதனாலே இந்த இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வீரரும் நூறு சதவீத திறமைகளை வெளிப்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும்." என்றார்.



விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே. எஸ். விசுவநாதன், சி.டி.சி.ஏ. நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter