மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டியில் சி.ஐ.டி., கல்லூரி சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டியில் சி.ஐ.டி., அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டியில் சி.ஐ.டி., அணி சாம்பியன் பட்டம் வென்றது.



அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டித் தொடர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. 8 கல்லூரிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், சி.ஐ.டி., மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், சி.ஐ.டி., கல்லூரி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 



மேலும், 3 மற்றும் 4-வது இடங்களை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும். என்.ஜி.பி., கல்லூரியும் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கே. பொம்மன்னராஜா வழங்கினார். 

Newsletter