அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி தொடக்கம்

கோவை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.

கோவை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இன்று தொடங்கியது. 

என்.ஜி.பி. கல்லூரியின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 16 கல்லூரிகள் கலந்து கொண்டுள்ளன. முதல்நாள் நடைபெற்ற ஆட்டத்தில், இத்தொடரை நடத்தும் என்.ஜி.பி. கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் கோவை தொழில்நுட்பக் கல்லூரியை 3-4 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி வீழ்த்தியது. பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய எஸ்.சி.ஏ.டி., தொழில்நுட்பக் கல்லூரி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேற்கண்ட வெற்றி பெற்ற அணிகள் அனைத்தும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter