மாநில அளவிலான ஜுனியர் ஓபன் டென்னிஸ் போட்டி : அர்மான் அகமது, நிதின் பிரனவ் சாம்பியன்

கோவை: மாநில அளவிலான ஜுனியர் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் அர்மான் அகமது, நிதின் பிரனவ் சாம்பியன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கோவை: மாநில அளவிலான ஜுனியர் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் அர்மான் அகமது, நிதின் பிரனவ் சாம்பியன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

துடியலூர் அருகே உள்ள மோக்ஸி டென்னிஸ் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியானது, 10 வயதுக்குட்பட்டோர், 12, 14 மற்றும் 18 ஆகிய பிரிவுகளில் வயது அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நிதின் பிரனவ் 9-5 என்ற செட் கணக்கில் பி.டி. சுபாஷை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 



14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின் இறுதி ஆட்டத்தில் 6-4 என்ற செட் கணக்கில் தருண் விக்ரமை வீழ்த்தி அர்மன் அகமது கோப்பையைக் கைப்பற்றினார். இதேபோல, 10 மற்றும் 12 வயது பிரிவுகளில் திருமுருகன் மற்றும் ஹரிசரன் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் நிதின் பிரனவ், கே.கே. சித்தார்த் ஜோடி சுபாஷ் மற்றும் சுந்தரகணபதி ஜோடியை வீழ்த்தியது. 14 வயது பிரிவில் சித்தார்த் கவுதமன் மற்றும் எஸ்.டி. அகிலேஷ் ஜோடி, ஹரிசரன் மற்றும் ஸ்ரீகுமார் ஜோடியை 7-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். 



Newsletter