கோவையில் நாளை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ மாரத்தான்

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் போட்டி (ஆக.,19) கோவையில் நாளை நடக்கிறது.


கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில்,  ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் போட்டி (ஆக.,19) கோவையில் நாளை நடக்கிறது. 

கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களான சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், டிரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி தொண்டு நிறுவனம் இணைந்து ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாரத்தான் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடக்கிறது.

இந்த மாரத்தானில் பங்கேற்கும் பொதுப் போட்டியாளர்களுடன்  சுமார் 200 மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கி.மீ., தூரமும், 6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 கி.மீ., தூரமும் நடத்தப்படுகிறது. இதேபோல, பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும், ஆண்களுக்கு 10 கி.மீ., தூரமும் என அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த மாரத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் மூலம் திரட்டப்படும் வருவாய் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

மாரத்தானில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு டி-சர்ட், பதக்கம், சான்றிதழ், காலை உணவு மற்றும் புத்துணர்ச்சி பானம் ஆகியவை பெற ரூ.500-ம், டி-சர்ட் தவிர்த்து வேண்டுமெனில் ரூ.250 நன்கொடையாகப் பெறப்படும். கலந்துகொள்ள விரும்புபவர்கள் 8110042222 எனும் எண்ணிற்கு அழைக்கலாம்.  

Newsletter